உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு சின்னம்; இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர்! 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு சின்னம்; இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர்! 
Published on
Updated on
1 min read

2024 ஜனவரி 10,11ம் நாட்களில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான சின்னத்தை( Logo ) தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி 10, 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 மே மாதம் முதல் சுமார் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 250க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான சின்னத்தை( Logo ) தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிடவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com