தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்...!

தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்...!

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பக்தி நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் :

சென்னை நுங்கம்பாக்கத்தில்  உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அந்த துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் உட்பட 108 அரிய வகை பக்தி நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

பணி நியமன ஆணை :

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் மரணம் அடைந்த 10 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிக்க : திமுக பேச்சாளர் மீது திடீர் வழக்கு...அதிரடி நடவடிக்கை எடுத்த ஆளுநர் மாளிகை!

ஆய்வில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் :

பின்னர் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும்  கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், கோயில்களில் கண்டறியப்பட்ட கருணை ஓலைகள், செப்பு பட்டயங்கள், பிற ஓலைச்சுவடிகள் மற்றும் பராமரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் அறையினை பார்வையிட்டார். அதன்பின் அறநிலையத்துறை அலுவலகத்தின் கீழ் தளத்தில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். 

உற்சாக வரவேற்பு :

அப்போது, 100க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவுல் இசைக் கலைஞர்கள் மேளதாளத்துடன் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஜீயர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.