
எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வியின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த முத்தழிழ்ச்செல்வி என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7 ஆயிரத்து 200 மீட்டர் உயரத்தை கடந்து வெற்றிகரமாக தொடர்ந்து பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது பயணத்தில் மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக கடந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிட தனது வாழ்த்துகள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றிகரமாக பயணத்தை முடித்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.