டெல்லி மசோதா நிறைவேற்றம்; "மக்களாட்சியின் கருப்பு நாள்" முதலமைச்சர் கண்டனம்!

டெல்லி மசோதா நிறைவேற்றம்; "மக்களாட்சியின் கருப்பு நாள்" முதலமைச்சர் கண்டனம்!
Published on
Updated on
1 min read

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி மசோதா:

டெல்லி மாநிலத்தில் குடிமைப்பணி அலுவலர்களை நியமிப்பது யார் என்பது தொடர்பாக டெல்லி சட்டமன்றத்திற்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் இதுத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கே குடிமைப்பணி அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என தீர்பபளித்தது. இதனையடுத்து உடனடியாக டெல்லியில் குடிமைப்பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கும் அவசரச் சட்டத்தை மத்தி அரசு கொண்டுவந்தது. பின்னர் இச்சட்டத்தையே சட்ட மசோதாவாக இயற்ற மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. 

முதலமைச்சர் கண்டனம்:

கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இச்சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என விமர்சித்துள்ள அவர்,  எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்  என குறிப்பிட்டுள்ள அவர்  மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது எனவும் அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ள முதலமைச்சர், "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com