வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!

வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!

Published on

நிலவில் சந்திரயான் 3 ரோவர் சென்ற வழித்தடத்தில், பள்ளம் தென்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து நிலவில் லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் பல்வேறு ஆய்வுகளைத் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆய்வில் ஈடுபட பயணித்துக் கொண்டிருந்தபோது 4 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய பள்ளத்தை சந்திரயான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதனை 3 மீட்டர் தொலைவுக்கு முன்னரே  கண்டறிந்த ரோவர் உடனடியாக சுதாரித்து, பின்னர் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து ஆய்வைத் தொடர்ந்து வருகிறது. 

இது தொடர்பகாக நிலவில் ரோவரின் தடம் மற்றும் பள்ளத்தின் புகைப்படத்தையும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com