தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது...மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது...மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
Published on
Updated on
1 min read

தீவிரவாதம் மனிதகுலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என ”தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது” என்ற சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு நிதி இல்லை:

”தீவிரவாதத்திற்கு நிதி இல்லை” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள்நடைபெற்ற சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தீவிரவாதம் மனிதகுலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய மோடி, அந்த தீவிரவாதத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக தைரியத்துடன் போரிட்டு வரும் நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்தார்.

சூளூரைத்த மோடி:

தீவிரவாதத்தை வேரோடு தகர்த்தெரிய ஒரு செயலூக்கமான திட்டம் தேவை என்று குறிப்பிட்டு அவர்,  நமது குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், தீவிரவாதம் வீட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது எனவும், அதன் ஆதரவு வலையமைப்புகளை அறுத்தெரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல், தீவிரவாதத்தால் ஒரு தாக்குதல் நிகழ்ந்தாலும், அது பல பயங்கரங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அதனை வேரறுக்கும் வரை ஓயக்கூடாது எனவும் அவர் சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது.

பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தேவை:

தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்க வேண்டும் எனவும் தொழில்நுட்பத்தை தீவிரவாதத்திற்கு எதிராக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பணமோசடியை கருத்தில் கொண்டு தீவிரவாதத்திற்கு அர்ப்பணிக்கப்படும் அனைத்து நிதிப்பின்னலையும் தகர்த்தெரிய வேண்டும் எனவும் அதில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தேவை எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வெகுவாக குறைந்த நிதி:

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் பேசிய தேசிய புலனாய்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் திங்கர் குப்தா, கடந்த எட்டரை ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதி வெகுவாகக் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com