குஜராத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து....உயிரிழப்பு அதிகரிப்பு?!!!

குஜராத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து....உயிரிழப்பு அதிகரிப்பு?!!!

அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
Published on

அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 7வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், பலர் சிக்கிக் கொண்டனர்.  இதன் போது பலர் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் வைத்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமி தீயில் சிக்கி  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.  சிலர் மேல் தளங்களில் சிக்கியிருந்தனர்.  மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  இதற்கிடையில், மாடியில் கடுமையான தீ பற்றிய சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com