பழனி கோயிலில் தமிழன் என்ற பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கேள்வி :
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான கேள்விகள் எபப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழனி கோயிலில், தமிழன் என்ற பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம்...அமைச்சர் சொன்ன பதில்!
பதில் :
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேவாரமும், திருவாசகமும் அனைத்து கோயில்களிலும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் கூறினார். அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் நடந்து சென்று தமிழை வளர்த்த நிலையில், முதலமைச்சர் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்த்து வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி பதில்:
தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பாபநாசம், அம்மாபேட்டையில் புதிய மின்கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 78 ஆயிரத்து 404 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.