தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்...!

தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்...!
Published on
Updated on
1 min read

தமிழ் தொண்டாற்ற தமிழறிஞர்கள் முன் வர வேண்டுமென நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகொள் விடுத்திருக்கிறார்.

நேரில் அஞ்சலி:

தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன், 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தினால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவ்வை நடராஜன், சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து, சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

துரைமுருகன் அஞ்சலி:

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாடு நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், அவ்வை நடராஜன் மறைவு தமிழ் உலகிற்கு மிக பெரிய இழப்பு என்று தெரிவித்த அவர், யாரிடத்திலும் எந்த நிலையிலும் பொறாமை கொள்ளாதவர் அனைவரிடமும் அன்பு காட்ட கூடியவர். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய நேரத்தில்  கருணாநிதிதான் அவருக்கு முதன் முதலில் செயலாளர் பதவி வழங்கினார் என்று கூறினார். 

மிகப்பெரிய இழப்பு:

அவர் தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் புலமை பெற்றவர், அதுமட்டுமல்லாமல், வழிகாட்டியாக இருந்தவர்; அவருடைய  மறைவு எங்கள் வாட்டாரதில் உள்ளவர்களுக்கு மிக பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.

தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு:

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் அறிஞர்கள் ஒருவர் ஒருவராக மறைந்து வருகின்றனர், இது தமிழ் உலகிற்கு மிக பெரிய சோதனை காலம்; எனவே, தமிழுக்கு தொண்டாற்ற தமிழ் அறிஞர்கள் முன் வர வேண்டும் இதுதான் அவ்வை நடராஜன் மறைவிற்கு நாம் எடுக்க வேண்டிய சபதம் என்று தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் அமைச்சர் துரைமுருகன் அழைப்பு விடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com