மாதந்தோறும் மின்கட்டணம் உயர்வு...மத்திய அரசின் திட்டத்தை திமுக ஏற்காது...முற்றிலும் பொய்யானது!

மாதந்தோறும் மின்கட்டணம் உயர்வு...மத்திய அரசின் திட்டத்தை திமுக ஏற்காது...முற்றிலும் பொய்யானது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்காது என மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நாள் நேர்காணல் :

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாம் நாள் நேர்காணல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. 

இதையும் படிக்க : ”தமிழைத் தேடி” பயணம்...உலக தாய்மொழி நாளில் தொடக்கம்...ஆதரவளிக்குமாறு பாமக நிறுவனர் அறிக்கை!

திமுக வெற்றி பெறும் :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்று வருவதாகவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே ஒரு லட்சம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளதாக கூறினார். 

திமுக அரசு ஒருபோதும் ஏற்காது :

மேலும், புதிய மின்சார திருத்த சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்சாரம் உயர்த்தப்படும் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி  எதிரிவித்துள்ளார்.