’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!

சென்னையில் தொடங்கிய 'த்ரீ எக்ஸ் த்ரீ' எனப்படும் தேசிய சாம் பியன் ஷிப் கூடைப்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேறியது. 


இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார் பில் நடைபெறும் இந்த போட்டியின் ஆடவர் பிரிவில் 30 அணிகளும், மகளிர் பிரிவில் 26 அணிகளும் களமிறங்கி உள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதல் சுற்றில் 72 அணிகள் விளையாடிது.

இதையும் படிக்க : ”தமிழ்நாட்டிலிருந்து திமுகவை நீக்குவதற்காக இ பிஎஸ் போராடி வருகிறார்" - ஆர். பி. உதயகுமார்

இதில் தமிழ்நாடு ஆடவர் அணி, லீக் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மகளிர் பிரிவில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில்,  தமிழ்நாடு மகளிர் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு மகளிர் அணி 19 புள்ளிகள் பெற்ற நிலையில், குஜராத் அணி 14 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது .