தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 


தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வு 33 மையங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 500 தேர்வர்கள் தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் 100 சிசிடிவி கேமராக்களும், 110 காவலர்களை கொண்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்று வரும் தேர்வில், 6,401 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தேர்வுக்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு காவல் சார்பு ஆய்வாளர், தீயணைப்பு, மற்றும் மீட்பு பணிகளுக்கான நிலைய அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்விற்கு மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என  6ஆயிரத்து230  பேர் விண்ணப்பத்திருந்தனர். இதையடுத்து தேர்வு மையத்தில் தேர்வர்களை போலீசார்  சோதனை செய்து உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கும் போது, தேர்வு எழுத வந்த  காவலர் ஒருவர் சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே  உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெற்று வரும் எழுத்து தேர்வினை 9 ஆயிரத்து 484 பேர் எழுதி வருகின்றனர். முன்னதாக தேர்வு  எழுதுவதற்காக கடைசி நேரத்தில் வந்த தேர்வர்களை போலீசார் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தேர்வு மையத்திற்குள் விட்டு வந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com