2023 பொங்கலுக்கு...15 டிசைன்களில் பரிசு வழங்கும் தமிழக அரசு...!10-க்குள் உங்கள் வீட்டில்...!!

2023 பொங்கலுக்கு...15 டிசைன்களில் பரிசு வழங்கும் தமிழக அரசு...!10-க்குள் உங்கள் வீட்டில்...!!
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையையொட்டி,  இலவச வேட்டி சேலைகளை புதிய டிசைன்களில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு என்பது வழங்கப்படும். முதலில் பொங்கல் பரிசு என்பது வேட்டி சேலையுடன் முடிந்துவிடும். அதற்கு பிறகு, வேட்டி சேலையுடன் இணைத்து சர்க்கரை, கரும்பு என ஒவ்வொரு பொருட்களாக இணைத்து தமிழக அரசு வழங்கி வருகிறது. அது காலப்போக்கில் மாறி தற்போது வேட்டி, சேலையுடன் இணைத்து 14 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. 

பொங்கல் பரிசு:

அந்த வகையில், 2023-ம் ஆண்டு வழங்கவிருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, இந்த முறை பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ’ஆயிரம் ரூபாய் ரொக்கம்’ கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியானது.

ஆலோசனை கூட்டம்:

இந்நிலையில், பொங்கல் பரிசுடன் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய டிசைன்களில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலைகளும், 5 டிசைன்களில் வேட்டிகளும் விநியோகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த இலவச வேட்டி சேலைகளின் டிசைன்களை தமிழக அரசு தற்போது மாற்றியமைத்துள்ளது.

தமிழக அரசு உத்தரவு:

மேலும், 2023 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த புது டிசைன் வேட்டி சேலைகளை அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com