தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

1924-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த இம்மானுவேல் சேகரன், 1942-ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவர். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில், இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை யொட்டி சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே,  இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அவரது மகள் பிரபா ராணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com