திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டி.டி.தினகரன் திசை திருப்புவதற்கு ஸ்டாலின் தன் மகனைவிட்டு சனாதனத்தை பேச சொல்லியிருக்கிறார் என சாடியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக சார்பில் பெரியார் சிலை முன்பு கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினர் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகையில் காவிரி என்பது தமிழ்நாட்டிற்கு கடவுள் கொடுத்த கொடை. கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது குறிப்பாக நாகப்பட்டினத்தில் குறுவை சாகுபடி பயிர்க்கு போதிய தண்ணீரின்றி கால் நடைகள் மேய்ந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்த்து விவசாயிகள் கதறி அழுதனர். அதை பார்க்கும் போது மன வேதனைடைந்துள்ள தாக தெரிவித்துள்ளார்.
மேலும்," மீண்டும் பாஜக அரசு மத்தியில் வந்து விடுமோ என்ற பயத்தில் திமுக அரசு பயப்படுகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி வழங்க வேண்டிய உபரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி எம் எல் ஏ, எம்பி சீட் வாங்குவதற்காக கூட்டணியில் இருந்து வருகிறார்கள்" என குற்றம் சட்டியுயள்ளார்.
மேலும்," தற்போது சனாதனத்தை பற்றி பேசி வருகிறார்கள். அரசு ஊழியர்கள், மக்கள் பிரச்சனை , தொழிலாளர்கள் , அரசு ஆசிரியர்கள் பிரச்சனை , விலைவாசி உயர்வு ,இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கு ஸ்டாலின் தன் மகனைவிட்டு சனாதனத்தை பேச சொல்லியிருக்கிறார். சனாதனம் என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. அதை ஒழிக்க சொல்லியிருக்கிறார் . தமிழகத்தில் ஒழிக்க பட வேண்டியது திமுக தான் .உதயநிதி உங்கள் வீட்டில் முதலில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் . திமுகவை நம்பி போன செந்தில் பாலாஜி குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. அடுத்தது சேகர்பாபு தான் . தீபாவளிக்கு, விநாயகருக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர், ஓனாம் பண்டிகைக்கு மலையாலத்தில் வாழ்த்து சொல்கிறார் என்பது வேடிக்கையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || "அவருக்கு எதுக்குங்க சீப்பு?" ஜெயக்குமாரை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!!