மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, அமைச்சர் பொன்முடிக்கு சம்மன்!

மீண்டும் விசாரணைக்கு ஆஜராக, அமைச்சர் பொன்முடிக்கு சம்மன்!
Published on
Updated on
1 min read

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.  சென்னையில்  எழும்பூர், பெசண்ட் நகர் உட்பட 5 இடங்கள் மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல் அமைச்சரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்டோர் வீடுகளிலும் துணை ராணுவத்தினர் உதவியுடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற சோதனையில், 70  லட்சம் ரூபாய் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் பொன்முடியிடம் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இதேபோல், சோதனையின் போது நகை மதிப்பீட்டாளர்களும் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். 

இதனிடையே, காலை முதல் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக அமைச்சர் பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை வீட்டில் இருந்து சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து  செல்லப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம் சிகமாணியிடமும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் போது கிடைக்கப்பெற்ற ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் இறுதியில் பொன்முடியும் அவரது மகன் கவுதம் சிகாமணியும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் நுங்கம்பாக்கத்தில் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சா் பொன்முடி  மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோாிடம் அமலாக்கத்துறையினா் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அமைச்சா் பொன்முடி கைது இல்லை என அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தொிவித்தாா். 

இதற்கிடையே விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில் அமைச்சா் பொன்முடி அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றாா். இதற்கிடையே திமுக வழக்கறிஞா் சரவணன் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோா் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பட்டுள்ளதாக தொிவித்தாா். 

மேலும் திமுக அரசின் மீது கலக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இத்தகைய செயல்களை செய்து வருவதாகவும் அவா் விமா்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com