தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!! ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அதிவீரபாண்டியன்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!! ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அதிவீரபாண்டியன்!!

தீபாவளி பண்டிகை வர இருப்பதை முன்னிட்டு இரயில்களில் பட்டாசு, எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்வதை தடுக்க சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் இரயில்வே காவல்த்துறை மற்றும் இருப்பு பாதை காவல்துறை சார்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன்...

அரசு இருப்புப் பாதை காவல்துறையின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்கள், 7 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 24 காவல் ஆளுநர்கள் மற்றும் சென்னையில் 454 காவல் ஆளுநர்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை ஆளுநர்கள், காவல்துறை பாதுகாப்பு படை உதவியுடன் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.

தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பொதுமக்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் சொந்த ஊர் செல்வதற்கு ரயில் மூலம் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு இந்த சோதனை நடைபெறுகிறது என தெரிவித்தார்.

சென்னை எழும்பூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுவரை தடை செய்யப்பட்ட பட்டாசை எடுத்துச் சென்றவர்கள் யாரும் பிடிபடவில்லை. இரயில் நிலையத்தின் நுழைவாயிலில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சோதனை கருவிகள் இருப்பதால் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர முடியாது.

இரயில் நிலையத்தில் மாணவர்களால் ஏற்ப்படும் குற்றச்சம்பவங்கள், கல் எரிந்தல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை நான்கு முறை வழக்குகள் பதிவு செய்து இருக்கிறோம் 32 பேர் கைது செய்திருக்கிறோம் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

மாணவ பருவத்தில் ரீல்ஸ், மீம்ஸ் போன்ற ஆசைக்களால் இந்த தவறு செய்கிறார்கள். இது போன்ற குற்றச்செயலில் ஈடுப்பட்டு எஃப் ஐ ஆர் போடப்பட்டால் வரும் காலங்களில் அரசு வேலை, வெளிநாடு செல்வது போன்ற அவர்கள் வருங்காலங்கள் பாதிக்கப்படும். எனவே இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் கைது!!!