ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!

ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!
Published on
Updated on
1 min read

ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷியை பதவி நீக்கம் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிாிழந்த நிலையில் 81 போின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தன. அதில் 29 பேரின் சடலங்கள், மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ள 52 சடலங்களையும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷியை பதவி நீக்கம் செய்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர், அர்ச்சனா ஜோஷி ஆவார்.

அர்ச்சனா ஜோஷி, ஜூலை 31 அன்று, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பொறுப்பேற்றார். அர்ச்சனா ஜோஷி தான்  முதல் பெண் பொது மேலாளர் மற்றும் முதல் பெண் IRTS அதிகாரியும் ஆவார். இவர், பொது மேலாளராக சேர்வதற்கு முன்பு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே வாரியம், சுற்றுலா மற்றும் கேட்டரிங், கூடுதல் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டை உலுக்கிய கோர சம்பவமான பாலசோர் ரயில் விபத்தின் எதிரொலியாக, தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷியை பதவி நீக்கம் செய்து, ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com