யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...

சிவகங்கையில், சட்டவிரோதமாக யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைதாகியுள்ளனர்.

யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...

சிவகங்கை : தமிழ்நாடு வனத்துறை நுண்ணரிவு மற்றும் புலனாய்வு பிரிவு சென்னை,மதுரை வனக்காவல் படை, விருதுநகர் வன பாதுகாப்பு படை, சிவகங்கை மாவட்ட வனப்பணியாளர்கள், சிவகங்கை வனச்சரக பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தனிக்குழுவானது யானை தந்தங்களை சட்டவிரோதமாக மறைத்து வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.

மேலும் படிக்க | குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்!

வந்த தகவலின் அடிப்படையில் காளையார்கோவில் அருகே மணியங்குடி கிராமப் பகுதியில் சங்கர் என்பவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை கைப்பற்றப்பற்றினர் மேலும் விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் பாண்டியன் மற்றும் தேனி உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | பனை விதை நடும் திருவிழா! கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!!

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் பெயரில் இவர்கள் சிவகங்கை வனச்சரகத்தில் கைது செய்யப்பட்டு சிவகங்கை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயக்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலையிலும் கணேஷ் பாண்டியனை மதுரை மத்திய சிறைச்சாலையிலும் அடைத்து வரப்பட்டனர்.