சிப்காட் தொழிலாளர் உயிரிழப்பு - விசிகவினர் போராட்டம்

கடலூர் சிப்காட் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் காரைக்காடு பகுதியில் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சிப்காட் தொழிலாளர் உயிரிழப்பு  - விசிகவினர் போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் மயங்கி விழுந்த அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்தார். 

இந்த அழகுல இவங்களுக்கு கேஷ்மீர் கேக்குதாம்... - கேளி செய்யும் நெட்டிசன்கள்

இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஏழுமலை குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டாததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | உழைப்பாளர் சிலையா? விவேகானந்தர் இல்லமா? குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறுவது எங்கே?