ஆளுநரை எதிர்த்து மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் - மதிமுக முடிவு

ஆளுநரை எதிர்த்து மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் - மதிமுக முடிவு
Published on
Updated on
1 min read

ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் இருந்து விலகக் கோரி, வரும் 20ம் தேதி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளதாக மதிமுக அறிவித்துள்ளது. 

மதிமுக பொதுக்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சிப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் இருந்து விலகக் கோரி, வரும் 20ம் தேதி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் பொதுசெயலாளர் வைகோ பங்கேற்பதாகவும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com