சித்து மூஸ்வாலா கொலை...மூளையாக செயல்பட்ட கோல்டி கைது?

சித்து மூஸ்வாலா கொலை...மூளையாக செயல்பட்ட கோல்டி கைது?

Published on

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைவழக்கில் மூளையாக செயல்பட்ட கனடா கேங்ஸ்டரான, கோல்டி ப்ரார் அமெரிக்காவில்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூளையாக செயல்பட்ட கேங்ஸ்டர்:

கடந்த மே மாதம் மன்சா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பாடகர் சித்து மூஸ்வாலா உயிரிழந்தார். இந்நிலையில் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட கோல்டி ப்ரார் தப்பியோடினர்.

பரிசுத்தொகை அறிவிப்பு:

இதையடுத்து, இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி தகவலளிப்போருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

கைதான கேங்ஸ்டர்:

இந்நிலையில் சித்து மூஸ்வாலா கொலைவழக்கில் மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் கலிபோர்னியாவில் வைத்து அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com