சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்' பட ஆடியோ உரிமை...!
’ஜவான்’ திரைப்படத்தின் இசை உரிமையை பல ஆயிரம் கோடிக்கு டி சீரிஸ் நிறுவனம் வாங்கியது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
பிரபல இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்றும், இதன் மூலம் திரையுலகில் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது என்றும் திரையுலக வணிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
'ஜவான்' படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது.
இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில், ''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது'' என குறிப்பிட்டிருக்கிறது.
இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக ஆர்வலர்களிடத்தில் அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமை குறித்த ஒப்பந்த விலை பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் திறமையும், அட்லீ குமாரின் நேர்த்தியான இயக்கத்தையும் இணைத்து 'ஜவான்' அற்புதமான படைப்பாக தயாராகி இருக்கிறது. உணர்வுபூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகிறது.