"மகன் சனாதனத்தை எதிர்ப்பார்... தந்தை மோடியிடம் சமாதானம் பேசுவார்" சீமான் காட்டம்!!

"மகன் சனாதனத்தை எதிர்ப்பார்... தந்தை மோடியிடம் சமாதானம் பேசுவார்" சீமான் காட்டம்!!
Published on
Updated on
1 min read

ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா கூட்டனியினர் யாரும் செல்லாத போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன் என சீமான் கேள்வி எழுப்பி  உள்ளார்.

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்.

அவர் பேசியதாவது, "சனாதனத்தை ஒழிக்க முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், ஜெயலலிதா ஆகியோர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு பதவி வழங்கினார்கள். திமுக அதுபோன்று ஏதும் முயற்சி மேற்கொண்டதா? திமுக என்பதே சனாதன கட்சி தான். சனாதனத்தில் ஊறித் திளைத்த கட்சி திமுக" என விமர்சித்துள்ளார்.

மேலும், "இந்தியா கூட்டனியில் உள்ளவர்கள் யாரும் செல்லாத போது தமிழக முதல்வர் மட்டும் ஏன் ஜி.20 மாநாட்டிற்கு சென்றார்? மகன் சனாதானத்தை எதிர்ப்பார் தந்தை சென்று மோடியிடம் சமாதானம் செய்வார். இதுதானே நடக்கிறது. சனாதானத்தின் தலைவரே மோடி தான். அவருடன் ஏன் சென்று நிர்க்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் யாரும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு செல்லாதபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தை ஒழிப்பதின் தொடக்கமே காங்கிரஸ் கட்சி தான் என்ற சீமான், தற்போது ஜனநாயகம் குறித்து பேச ப.சிதம்பரத்திற்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை 'பாரத்' என மத்திய அரசு மாற்ற முயற்சிப்பது குறித்து பேசிய சீமான், "வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்து மதம் என்ற பெயரை ஏன் மாற்றவில்லை? இறை நம்பிக்கை உள்ள ஆட்சி நடத்தும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளிக்கும், விநாயகர் சதூர்த்திக்கும் ஏன் வாழ்த்து சொல்வதில்லை" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com