விஜயலட்சுமியிடம் கல்யாண போட்டோ கேட்கும் சீமான்!!

விஜயலட்சுமியிடம் கல்யாண போட்டோ கேட்கும் சீமான்!!
Published on
Updated on
1 min read

தான் திருமணம் செய்ததாக கூறும்  விஜயலட்சுமி, அதற்கான புகைப்படம் இருந்தால் வெளியிடட்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கோவை  மண்டல நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் கோவை ராமநாதபுரத்தில்  நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், தேசியக் கட்சிகள் மட்டுமல்லாமல் திராவிடக் கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. ஆனால், ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் தான் போட்டியிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெறுவோம் என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனித்தே போட்டியிடலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தன்னைப் பற்றி விமர்சிக்க விஜயலட்சுமிக்கு  தகுதியில்லை என்று கூறிய சீமான், தான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்படம் இருந்தால் ஆதாரமாக வெளியிடட்டும் என்று சவால் விட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com