விடுமுறை முடிஞ்சாச்சு...இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

விடுமுறை முடிஞ்சாச்சு...இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

2023- 2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

இதையும் படிக்க : அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

மேலும் கோடை விடுமுறை முடிந்து முதன்முதலாக பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து முதல் நாளே மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதனிடையே, நேற்றைய தினம் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவ, மாணவிகள் புத்தகப்பை, பேனா போன்ற பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.