பெட்ரோல் கேனுடன் மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

பெட்ரோல் கேனுடன் மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!
Published on
Updated on
2 min read

பண்ருட்டி நகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் பணியிலிருந்து  நீக்கப்பட்டதால்  பெட்ரோல் பாட்டிலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் 33 வாடுகளில் உள்ளன. இதில் 150க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  மேலும், ஒப்பந்த தூய்மைப் பணியாளராக 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் இது நாள் வரையில் பணியில் இருந்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் காரணமின்றி திடீரென 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணியிலிருந்து நகராட்சி நிர்வாகம் நீக்கம் செய்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு பணியாளர் பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களில் 50 பேரில் 30க்கும் மேற்பட்டோர் கடந்த அதிமுக ஆட்சியில் பணியில் சேர்ந்து 10 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில், தற்பொழுது திமுக ஆட்சி  மாற்றம் காரணமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு புதிய பணியாளர்களை நியமனம் செய்ய இருப்பதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com