ஆளுநரை சந்தித்த காவல் ஆணையர் சந்திப் ரத்தோர்...பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்!

ஆளுநரை சந்தித்த காவல் ஆணையர் சந்திப் ரத்தோர்...பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்!
Published on
Updated on
1 min read

ஆளுநர் ஆர்.என். ரவியின் பாதுகாப்பு குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
  
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்  மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர் போலீசார். இதனிடையே, கருக்கா வினோத் மீது, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்று 124-வது சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆளுநரின் துணை செயலாளர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.  

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மற்றும் குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 உதவி ஆணையர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே ஆளுநரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து,  சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். இதேபோன்று, அடையாறு காவல் துணை ஆணையர் பொன் கார்த்தி, சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர்,  ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com