புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை..! டிப்பர் லாரியை சிறைபிடித்த மக்கள்...!

புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை..!  டிப்பர் லாரியை சிறைபிடித்த மக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிப்பர் லாரியை சிறை  பிடித்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குளந்திரான்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள விவசாயிகள் 61ஏக்கர் பரப்பளவில் உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய குளத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பெரிய குளத்தில் மண் குவாரி அமைக்கப்பட்டு மண் கடத்தல் நடைபெற்று வருவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்திற்கு சென்று மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,  தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மண்குவாரி அமைத்து மண் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டவரிடம் வருவாய்த் துறையினர் கேட்ட பொழுது தங்களுக்கு மண் எடுப்பதற்கான அனுமதி அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். 

இது சம்பந்தமாக வருவாய்த்துறையினருக்கு எந்த ஒரு அறிக்கையும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று வட்டாட்சியர் இராமசாமி தெரிவித்தார். அதனால் மண் அல்ல தற்காலிகமாக தடை விதித்தார். 

மேலும் மண் குவாரி அமைத்து மண் எடுப்பதற்கான அரசாணையை தங்களிடம் தாக்கல் செய்யுமாறும் வருகின்ற சனிக்கிழமை அன்று மண் குவாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குளந்திரான்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு பெரிய குளத்தில் மண்குவாரி அமைத்து மண் எடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க     |