
சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாடு செய்துள்ளாா்.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தக்காளியின் வரத்து குறைவாக உள்ள காரணத்தினால் வெளிச்சந்தைகளில் தக்காளியின் விலை உயா்ந்து காணப்படுகிறது.
இந்த விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் தடுக்க, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் முதல் கட்டமாக 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.