ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை:  ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை:  ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களாக வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மொத்த விலையில் தக்காளி கிலோ ஒன்று 100 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 130 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் படி, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவது என முடிவு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ஒரு கிலோ தக்காளி வினியோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், மற்ற கடைகளில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நபர் ஒருவருக்கு 1 கிலோ மட்டும் தான் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், அளவை அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க     | ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்குமாறு...தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்...!