சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ். ராஜு பதவி ஏற்பு

சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக எஸ்.எஸ். ராஜு பதவி ஏற்பு
Published on
Updated on
1 min read


 
சென்னை விமான நிலையத்தில் இயக்குனராக டாக்டர் சரத்குமார் இருந்து வந்தார். இவர் சென்னை ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய கட்டுமான துறையின் தலைமை அதிகாரியாக  பணியாற்றினார். கடந்த  2 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய இயக்குனராக பணியாற்றினார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலைய இயக்குனர் பதவி காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் விமானங்கள்  இயக்கம் (ஆபரேஷன்) துறைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் சென்னையில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் திறப்பு விழா வரையில் நிலைய இயக்குனராக சரத்குமார் தொடர்ந்தார். கடந்த மாதம் சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த சரத்குமார் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி தலைமையகத்தில் உள்ள இந்திய விமானங்கள் இயக்கம் ஆபரேஷன் பிரிவு உறுப்பினர் பதவியை ஏற்க உத்தரவிட்டப்பட்டது. 

இதையடுத்து சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த டாக்டர் சரத்குமார் தனது பொறுப்புகளை சென்னை விமான நிலைய பொது மேலாளர் (விமானங்கள் இயக்கம்) எஸ் எஸ் ராஜுவிடம் ஒப்படைத்தார்.  

சென்னை விமான நிலைய ஆணையக தற்காலிக புதிய இயக்குனராக  பொது மேலாளர் எஸ்.எஸ். ராஜு பதவி ஏற்று கொண்டார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com