இந்தியா - பாகிஸ்தான் போட்டி எதிரொலி : விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த நட்சத்திர ஓட்டல் ரூம் வாடகை!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி எதிரொலி : விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த நட்சத்திர ஓட்டல் ரூம் வாடகை!
Published on
Updated on
1 min read

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரையொட்டி, அகமதாபாத்தில் நட்சத்திர ஓட்டல்களின் ரூம் வாடகை விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது.


ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசிசி வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 50 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் நரேந்திரமோடி மைதானம் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே, அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காக குவியவுள்ள  ரசிகர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் இணையதளம் மூலமாக ரூம்களை புக் செய்து வருகின்றனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன. 

அந்தவகையில், வெறும் 5 ஆயிரம் ரூம் வாடகை கொண்ட ஓட்டல்கள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று மட்டும் 10 மடங்காக உயர்த்தியுள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் கூட ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டது தான் இங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, 8 ஆயிரம் ரூம் வாடகை கொண்ட ஆடம்பர ஓட்டலில், தற்போது 40 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விண்ணை தொடும் அளவிற்கு நட்சத்திர ஓட்டல்களின் ரூம் வாடகைகள் அதிகரித்துள்ள நிலையிலும், ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரூம்களை புக் செய்து வருவது தான் அனைவரையும் சற்று நிமிர்ந்து பார்க்க வைக்கிறது...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com