பயிற்சியின் போது காயமடைந்த ரோகித்...இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடுவாரா?!!

பயிற்சியின் போது காயமடைந்த ரோகித்...இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடுவாரா?!!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக அடிலெய்டில் நடந்த பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்தார். 

காயமடைந்த ரோகித் சர்மா:

நவம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக அடிலெய்டில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.  பயிற்சியின் போது விளையாட்டை பார்த்து கொண்டிருந்தார் ரோகித்.  அப்போது எதிர்பாராத விதமாக வீரர் ஒருவர் அடித்த பந்து அவரது கையை தாக்கியது.  

இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  காயம் எந்த அளவிற்கு தீவிரமானது என்பதை குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மீண்டும் திரும்பிய ரோகித்:

காயம் ஏற்பட்டவுடன் பயிற்சியை விட்டு வெளியேறிய ரோகித், கையில் ஐஸ் கட்டியுடன் பயிற்சி நடைபெறும் இடத்தில் அமர்ந்துள்ளார்.  ரோஹித் சர்மாவை பார்க்கும் போது அவர் மிகவும் வேதனையில் இருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது.

அரையிறுதியில் ஆடுவாரா?:

காயம் தீவிரமடைந்தால், இந்திய அணிக்கு சிக்கல்ஏற்படலாம்.  இருப்பினும், ரோஹித் சிறிது நேரம் கழித்து வலைகளுக்குத் திரும்பியதை பார்க்கும் போது காயம் பெரிதாக இல்லை என்றே தெரிகிறது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    95 வயதை அடைந்த அத்வானி....வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!!!