"சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு!

"சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு!

நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு உத்தர விட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையின் மாநில அள வில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்த ஆய் வுக் கூட்டம் கிண்டியில் இன்று நடைபெற்றது. இந்த ஆய் வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம், பராமரிப்பு  மற்றும்  கிராம சாலைகள் தொடர்பான ஆலோசனையானது நடைபெற்றது.

மேலும்,  நில எடுப்பு பணிகள், சாலைகள், சாலை மேம்பாலங்கள், இரயில் வே மேம்பாலங்கள், ஆற்றுப்பாலங்கள், புற வழிச்சாலைகள், ஊராட்சி மற்றும் ஊராட்சி மத்திய சாலைகளை தரம் உயர்த்தும் பணிகள் மற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரை வாக முடிக்க நட வடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு வலியுறுத்தி உள்ளார். 

இந்த ஆய் வு கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாத வ், திட்ட இயக்குநர் மருத்து வர் எஸ்.பிரபாகர், நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்டப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:2 தனியார் மருத்து வ கல்லூரிகளுக்குத் தடை; மாண வர் சேர்க்கையில் குழப்பம்!