”பேச்சில் மட்டுமே பெண்களுக்கு மரியாதை...ஆனால் செயல்பாடோ...”பிரதமரை விமர்சித்த ராகுல்!

”பேச்சில் மட்டுமே பெண்களுக்கு மரியாதை...ஆனால் செயல்பாடோ...”பிரதமரை விமர்சித்த ராகுல்!

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதால் குஜராத்தில் கலவரம் வெடித்தது.  இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதிலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு இடங்களுக்கு தப்பித்து சென்றனர்.

பில்கிஸ் பானோ:

தப்பித்து சென்ற குடும்பங்களில் பில்கிஸ் பானோவின் குடும்பமும் ஒன்று.  தப்பி செல்லும் போது ஒரு கலவர கும்பல் அவர்களை தாக்க தொடங்கியது.  இந்த தாக்குதலில் பில்கிஸ் பானோவின் 3 வயது மகள் உட்பட் 7 பேர் கொல்லப்பட்டனர்.  அப்போது பானோ 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  பானோ கலகக்காரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ-டம் வழக்கு வழங்கப்பட்டது.  அவர்கள் விசாரணையின் முடிவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்ப்ட்ட குற்றவாளிகள் 11 பேருக்கும் 2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: விடுதலை நாளில் பறிபோன சுதந்திரம்!!!

நரி சக்தி:

பிரதமர் மோடி 75வது சுதந்திர தினவிழாவில் நரி சக்திக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.  பெண்கள் சக்தியை மேம்படுத்துவது அனைவரது இலக்காக இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.  வரும் ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது முக்கியம் எனவும் மோடி பேசியிருந்தார்.

குற்றவாளிகளும் விடுதலையும்:

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  நீதிமன்றத்த்டின் அறிவுறுத்தலின் படி சுஜல் மைத்ரா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளையும் விடுவிக்க நன்னடத்தை அடிப்படையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார் சுஜல் மைத்ரா.  இந்த பரிந்துரை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவும் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்தார்.

சுஜல் மைத்ரா குழு பரிந்துரை அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 11 குற்றவாளிகளும் சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இம்மாதிரியான கொடூரமான குற்றங்களை செய்தவர்களை விடுவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நீதி அமைப்பின் மீதான நம்பிக்கை குறையும் என மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பில்கிஸ் பானோ குடும்பம் கவலை:

குற்றவாளிகளின் விடுதலை பெருத்த ஏமாற்றமும் கவலையும் அளிப்பதாக பில்கிஸ் பானோவின் குடும்பம் தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும் விடுதலை குறித்து அவர்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எதிர்ப்புகளும் விமர்சனங்களும்:

குஜராத்தின் பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகளின் விடுதலையை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

ராகுல் காந்தி:

ஐந்து மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து அவருடைய மூன்று மாஅத குழந்தையையும் கொன்ற குற்றவாளுகளுக்கு ஆசாத் கி அம்ரித் மகத்சவ் கொண்டாடும் தருணத்தில் விடுதலை செய்திருப்பது தான் பெண்கள் சக்திக்கு அளிக்கும் மரியாதையா என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.  மேலும் பிரதமரின் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை முழு நாடும் பார்த்து கொண்டிருக்கிறது எனவும் ராகுல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் சுதந்திர உரையில் குறிப்பிட்டிருந்த பெண்கள் எதிரான மனநிலையை மாற்ற வேண்டும் எனவும் பெண்களை மதிக்க வேண்டும் எனவும் பேசியிநுந்ததை இங்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி:

கர்ப்பிணி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக அனைத்து நீதிமன்றங்களிலும் தண்டனை பெற்ற குற்றவாளிகளை பாஜக அரசு விடுவிப்பதுதான் பெண்களுக்கான மரியாதையா என கேட்டுள்ளார் பிரியங்கா.  மேலும் இது உணர்வற்ற செயல் எனவும் பெண்களுக்கு எதிரான அநீதி எனவும் பதிவிட்டுள்ளார்.