மீட்கப்பட்ட குட்டி யானை... தாய் யானையுடன் சேர்ப்பு!!

மீட்கப்பட்ட குட்டி யானை... தாய் யானையுடன் சேர்ப்பு!!
Published on
Updated on
1 min read

மேட்டூர்அருகே வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குட்டியானையை கர்நாடக வனத்துறையினர் மீட்டு தாய் யானையுடன் சேர்த்தனர்.

மேட்டூர் அருகே தமிழ்நாட்டு கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளது பாலாறுவனப்பகுதி.  இங்குயானை, கரடி, மான், முயல் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன.  தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.   இதனால் பாலாறு வனப்பகுதியில் இருந்து காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி காவிரி ஆற்றுக்கு படையெடுத்து செல்கின்றன.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்துள்ளன. யானைக்கூட்டங்கள் தண்ணீர் அருந்தி விட்டு காவிரியை கடந்து மறுகரையில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுவிட குட்டியானை ஒன்று தண்ணீரில் நீந்த முடியாமல் கரையிலேயே நின்றுவிட்டது.  இதனை கண்ட கர்நாடக வனத்துறையினர் குட்டியானையை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  

குட்டியானையை வாகனம் மூலம் பாலாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.   அங்கு தாய் யானை கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வாகனத்தில் இருந்த குட்டியானையை வனத்துறையினர் இறக்கிவிட்டனர்.  பின்னர் வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து உடனடியாக சென்ற நிலையில் தாய் யானை குட்டி யானையை மெதுவாக அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்தது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com