தமிழ்நாட்டில் ஏசியன் பீச்கேம் நடத்துவதற்கு கோரிக்கை ...!!!

தமிழ்நாட்டில் ஏசியன் பீச்கேம் நடத்துவதற்கு கோரிக்கை ...!!!
Published on
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகையில் ஒன்றிய‌ தகவல் தொழில்நுட்பம்  ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,  தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். 

பட்டமளிப்பு விழா:

நாளை தமிழ்நாடு உடற்க்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் சென்னை வந்தடைந்துள்ளார்.

அவரை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அமைச்சர்:

தமிழ்நாட்டில் விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமர் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவத்தை வழங்கி வருகிறார் அந்த வகையில் விளையாட்டு துறையில் இந்தியா முதல் இடத்தில் திகழ வேண்டும் என்பதற்கான பல்வேறு வழிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் விளையாட்டுதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் கேலோ இந்தியா போட்டிகளில் ஆண்டுக்கு 15,000 மேற்ப்பட்ட வீரர்கள் பங்கு பெற்று வருகின்றனர் எனவும் கேலோ இந்தியா விளையாட்டு மையத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் வரவேற்கதக்கது. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
 
தமிழ்நாட்டில் ஏசியன் பீச்கேம் நடத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் 37வது நேஷனல் விளையாட்டு போட்டி நடத்துவதற்கும் தமிழ்நாட்டில் நேஷனல் யூத் ஃபெஸ்டிவல் நடத்துவதற்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விளையாட்டு துறையில் எந்தவித அரசியலும் இல்லாமல் விளையாட்டுத்துறை ஊக்கப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர்  உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com