காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு.... ரத்து செய்ய கோரிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் அந்தத் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு.... ரத்து செய்ய கோரிக்கை

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 1,905 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 1.50 லட்சம் தேர்வர்கள்  தேர்வை எழுதினர்.

மேலும், தேர்வில் 969 பேர் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமனம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்வில் குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் தேர்ச்சி பெறும் விதமாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.