மோடியின் தடை விதிக்கப்பட்ட ஆவணப்படத்தை வெளியிட வைக்கப்பட்ட கோரிக்கை......

மோடியின் தடை விதிக்கப்பட்ட ஆவணப்படத்தை  வெளியிட வைக்கப்பட்ட கோரிக்கை......
Published on
Updated on
1 min read

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப் படத்தை பார்க்க அரசு தடை விதிக்காமல் தமிழக அரசே முன்னின்று இந்த ஆவணப்படத்தை திரையிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை.

ஆவணப்படம்:

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் லேப்டாப் மூலமாக பார்த்தனர்.  

திரையிடும் மாணவர்கள்:

பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆவண படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள்,  கல்வி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் சங்கத்தினர் மற்றும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரையிட்டு வருகின்றனர்.

ஆவணப் படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி பேசுகையில்...

பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமர்ந்து பிபிசி வெளியிட்டுள்ள குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தை பார்த்துள்ளோம்.  ஆவணப்படத்தில் நரேந்திர மோடி, அமித்ஷா,விஷ்வ ஹிந்து பரிஷத், பிஜேபி, ஆர் எஸ் எஸ் எந்த அளவிற்கு இனப்படுகொலை செய்தது என்பதை வெட்ட வெளிச்சமாக பிபிசி ஊடகத்தின் மூலமாக இந்த ஆவணப்படம் வெளிகாட்டி இருக்கிறது என்றார்.

மாணவர்கள் கோரிக்கை:

இந்திய அரசாங்கம் ஒளிபரப்பை தடை செய்திருக்கிறதே தவிர பார்ப்பதை தடை செய்யவில்லை. ஆனால் ஆவணப் படத்தை பார்க்கும் மாணவர்களை தடுக்கும் வேலையில் காவல்துறையும் பல்கலைக்கழக வளாகமும் செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் ஆவண படத்தை திரையிட தடை விதிப்பது எந்த வகையிலும் ஜனநாயகம் மாண்பு கிடையாது.  மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதை இந்திய மாணவர் சங்கம் அனுமதிக்காது என்றார்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை திட்டமிட்டு படுகொலை செய்தது இந்த ஆவணப்படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது என்றும் இந்தியா முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்வி வளாகங்கள் மற்றும் பட்டி தொட்டி எங்கும் இந்திய மாணவர் சங்கம் இதை ஒளிபரப்பும் என கூறினார்.

அத்தோடு தமிழக அரசு பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட தடை விதிக்காமல், அசே முன்னின்று இதை திரையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com