குடியரசு தினவிழா......கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தினவிழா......கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு

Published on

குடியரசு தினவிழாவையொட்டி கோவை மாநகரில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யபட்டுள்ளது.

மத்திய அரசின் எச்சரிக்கையால் மாநகரில் மட்டும் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்த உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும், பார்சல் அலுவலகங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தங்கும் விடுதிகளில் பதிவேடு சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மாநகரில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் எனவும் கோவை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com