குற்றாலம் மெயின் அருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்...!ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்!

குற்றாலம் மெயின் அருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்...!ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்!
Published on
Updated on
1 min read

குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. அங்கு கடந்த சில வாரங்களாக அனைத்து அருவியிலும் நீர்வரத்து சீராக இருந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழையால் குற்றால மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இரவு முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com