பல் பாதுகாப்பு விழிப்புணர்வு ‘காலண்டர்’ வெளியீடு...

பல் பாதுகாப்பு விழிப்புணர்வு ‘காலண்டர்’ வெளியீடு...
Published on
Updated on
1 min read

சென்னை | மயிலாப்பூரில் பற்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாட்காட்டி வெளியிடப்பட்டது. பற்களைப் பாதிக்கக்கூடும் என்று நினைக்கும் துரித உணவுகள் மற்றும் இனிப்புகளைக் கூட ஆரோக்கியமாக மென்று உண்பதன் மூலம் பற்களைப் பாதுகாக்க முடியும் என்று வி லிட்டில் மருத்துவமனை அறிவுறுத்துகிறது.

வி லிட்டில் மருத்துவமனை பயிற்சியின் பற்களை சரி செய்து கொண்ட குழந்தைகளை மாடல்களாக வைத்து விழிப்புணர்வு நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியை, டாக்டர் ஷிஃபா சம்சுதீன், அம்ரிதா சமந்த், ஸ்ருதி நகுல், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் வெளியிட்டனர்.

அப்போது பேசிய விஜயலட்சுமி, தனக்கு ஒரு தாய் என்ற பார்வையில், குழந்தைகளின் அழகைத் தாண்டி ஆரோக்கியத்திற்காகவும் அதிக இனிப்புகளை தவிர்ப்பதாகவும், குழந்தை மீது தனக்கு மிகுந்த அக்கரை இருப்பதாகவும் நெகிழ்ந்து பேசினார்.

மேலும் பேசிய அவர், “என் குழந்தையின் பல் அந்த அழகான முகத்திற்கும் மேலும் அழகு சேர்ப்பதால், நான் அந்த பற்களை மிகவும் பாதுகாக்கிறேன். ஆனால், இந்த காலண்டரில் வரும் குழந்தைகளின் அழகான போட்டோக்களைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்ச்யாக இருக்கின்றன” என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com