பாஜகவுடனான உறவு.... ஏலம்.... ஊழல்வாதிகள்.....

பாஜகவுடனான உறவு.... ஏலம்.... ஊழல்வாதிகள்.....
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போலி அடையாள அட்டையை தயாரித்து திமுகவினர் மோசடியில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடரும் முறைகேடுகள்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பண பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தயபிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

நன்மை பயக்கும் எந்தவொரு..:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுகவிற்கு முடிவெழுதும் வகையில் தான் முடிவெடுக்கும், மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு திட்டமும் திமுக அரசு கொடுக்கவில்லை என்ற அவர், தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் மாநிலமாக தமிழ்நாடு விலங்கி வருகிறது. 

ஊழல்வாதிகள்:

இந்த தேர்தல் அவர்களுக்கு பக்க பதிலடி கொடுக்கும், அதன் எதிரொலி 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என தெரிவித்த அவர் அமைச்சர்கள் கீதா ஜீவன் தங்கம் தென்னரசு நேரு, ரகுபதி, ஐ பெரியசாமி மூன்று பேரும் ஊழல்வாதிகள், அவர்கள் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதை ஏன் திமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். 

பொய்யான வழக்கு:

தனது சொந்த பிரச்சனையை வைத்து பொய் விளக்கம் பதிவு செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அதை மட்டும் உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் பொய் வழக்கை எதிர்கொள்வேன் என தெரிவித்தார்

வெற்றி எங்களுக்குதான்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம் வெற்றி பெற போவதும் நாங்கள் தான் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கக்கூடிய தேதிக்குள் வேட்பாளரை அறிவிப்போம் என்றார். மேலும், போலி வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து அதன் மூலம் பூத்தை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜகவுடனான உறவு என்ன?:

பாஜகவுடன் தோழமை, நட்பு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறோம் அவர்கள் கட்சியில் தேர்தல் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக தான் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். 

ஏலம்:
 
அதிமுகவை ஏலம் விட்டு வருகிறார்கள் என்று முதலமைச்சர் கூறியதற்கு பதில் அளித்த அவர், திமுகவில் தான் அந்த செயல் நடைபெற்று வருகிறது, அவர்களை பற்றி தான் ஏலம் போடும் அளவிற்கு இருக்கிறது. என தெரிவித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com