80 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைப்பு!

80 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைப்பு!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு காரணமாக 80 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 80 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, பேராசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வகங்கள் நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அங்கீகாரம் வழங்கப்படாத 80 கல்லூரிகளை  நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துற்றது. உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை அருகாமையில் உள்ள வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே உரிய உள்கட்ட அமைப்பு வசதிகள் இன்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com