தயாரான பட்டியல்...தேர்ந்தெடுக்க தயாராகும் ஸ்டாலின்...ஆவலோடு  உடன்பிறப்புகள்!!!

தயாரான பட்டியல்...தேர்ந்தெடுக்க தயாராகும் ஸ்டாலின்...ஆவலோடு  உடன்பிறப்புகள்!!!

திமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியான நிலையில் இன்னும் சில தினங்களில் பல்வேறு அணிகளில் பல மாற்றங்களும் புதிய நியமனங்களும் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உட்கட்சி தேர்தல்:

திமுகவின் உட்கட்சி தேர்தல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகள் தேர்தல்களும் பின்னர் மாவட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்குமான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டம்:

அதன் பிறகு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலினும் துணை பொதுச் செயலாளராக கனிமொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பட்டியலில் இளைஞரணி தலைவராக மீண்டும் உதயநிதி ஸ்டாலினே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகளிரணி தலைவரான கனிமொழி துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மகளிரணி தலைவராக விஜயா தயன்பன் நியமிக்கப்பட்டார்.

காலியான பணியிடங்கள்:

திமுகவின் பல பதவிகள் காலியான நிலையில் தற்போது அதை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இனிவரும் நாட்களில் திமுகவின் 20 அணிகள் 11 குழுக்களுக்கான முக்கிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  அதற்கான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

தீவிரம் காட்டும் நிர்வாகிகள்:

தற்போது திமுகவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது.  அந்த பதவிக்கு திமுகவின் அமைப்பு செயலாளராக இருக்கும் ஆர் எச் பாரதி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.  அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது பதவியும் காலியாகும்.  தலைமை செயலாளரான துரைமுருகன், பூச்சி முருகன், கஜா ஆகியோருக்கு வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கழகத் தொண்டர்கள்:

திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமை செயலாளராக நியமிக்கப்படவுள்ளனர்.  தற்போது அந்த பட்டியலில் மூவரது பெயர்கள் உள்ள நிலையில் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னரே கூறியது போல 20 அணிகள் 11 குழுக்களில் காலியாக உள்ள செயலாளர் துணை செயலாளர் இணை செயலாளர் பகுதி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விவரங்கள் தீவிரமாக தலைமையால் பரிசீலிக்கப்ப்ட்டு வரப்படுகிறது.  கட்சி தலைமையில் இருந்து தொண்டர்கள் வரை அறிவிப்புக்காக ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தாய் வீட்டிற்கே திரும்புகிறாரா டாக்டர் சரவணன்... டாக்டருக்கு வந்த க்ரீன் சிக்னல்!!