சில நாட்களாகவே தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு எண்ணற்ற கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கன்னியாகுமாி மாவட்டத்தில் டெம்போ வாகனத்தில் கேரளாவுக்கு கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அாிசி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் நேற்று (20/05/2023) நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இரவிபுதூர்கடை பகுதியில் ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN.74 AD.0079 பதிவெண் கொண்ட வைக்கோல் ஏற்றிவந்த 407 டெம்போ வாகனத்தை நிறுத்த முற்பட்டனர்.
அப்போது அந்த வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றது. எனவே, வாகனத்தினை பின் தொடர்ந்து துரத்தி சென்று மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது வழிமறித்தபோது, ஓட்டுநர் வாகனத்தினை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார்.
இதையும் படிக்க } ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அண்ணாமலை...!
பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது, வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் சுமார் 4000 கிலோ ரேஷன் அரிசி நூதனமாக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததும் தெரிந்தது. பின்னர் அந்த கடத்தல் அரிசியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து, பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிடங்கில் ஒப்படைக்கப்படுவதோடு, வாகனம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.