மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி நடைப்பயணம்:
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்திய மக்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும், கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது ஒற்றுமைப் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க: தொடர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி...பாஜக வெற்றியை ஈட்டுமா?
வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்:
இந்நிலையில், ராஜ்கோட் பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் மக்களிடையே பேசிய ராகுல், விவசாயக் கடன் தள்ளுபடி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டிய அவர், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாக விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத், ஹிமாசலப் பிரதேசப் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பிரச்சாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.