"நீட் தேர்வு ரத்து வாக்குறுதி; நிறைவேற்றப்படவில்லை" நினைவூட்டும் ஆர்.பி.உதயகுமார்!

"நீட் தேர்வு ரத்து வாக்குறுதி; நிறைவேற்றப்படவில்லை" நினைவூட்டும் ஆர்.பி.உதயகுமார்!
Published on
Updated on
1 min read

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான "நீட் தேர்வு ரத்து வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை" என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஏற்பாட்டில் 1 இலட்சம் மரக்கன்றுகள் வழங்கி மாநாட்டு அழைக்கும் நிகழ்ச்சி மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "மக்கள் விரும்பி திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யவில்லை. நூலிழையில் அதிமுக ஆட்சியை தவற விட்டத. திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு உண்மைக்கு மாறான பொய்களை கூறி வருகிறது. 

 நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள், அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை எடப்பாடி பழனிச்சாமி கட்டுக்குள் வைத்திருந்தார், பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு 3,600 கோடி மதுபான விற்பனையில் கரூர் கம்பெனிக்கு வசூலித்துள்ளது, கரூர் கம்பெனி வருடந்தோறும் வசூலித்த 3,600 கோடி ரூபாயை யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது" என கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com