அனைத்து வீடுகளிலும் “க்யூ ஆர் கோடு” ஒட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான நகர்ப்புற சேவைகளை குடிமக்கள் தங்கள் இல்லங்களிலேயே பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் “நமது சேவையில் நகராட்சி” மற்றும் “மக்கள் சேவையில் மாநகராட்சி” என்ற திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு மூலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து வீடுகளிலும் “க்யூ ஆர் கோடு” ஒட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 12 கோடி செலவில் பணிகள்.... 4 மாதங்களில் திறக்கப்படும்!!!